இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய டெல்டா (B.1.617.2) திரிபுடன் மேலும் 5 கொரோனா நோயாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தெமட்டகொடை பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 5 நபர்களுக்கே இந்த திரிபு ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
இது தற்போது இலங்கையில் பரவிவரும் B.117 கொவிட் திரிபை காட்டிலும் 50 மடங்கு வேகத்தில் பரவக்கூடியது என அவர் மேலும் தெரிவித்தார்.
ஏற்கனவே டெல்டா வைரஸ் தொற்றுக்குள்ளான இரண்டு நபர்களும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் அடையாளம் காணப்பட்டிருந்தனர். இந்நிலையில் தற்போது முதன்முறையாக உருமாறிய டெல்டா திரிபானது சமூகத்தில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment