மாவனல்லையில் மண்சரிவு – நால்வர் மாயம்! மீட்பு பணி தீவிரம்!!

மாவனெல்ல – தெவனகல்ல பகுதியில் மண்சரிவில் சிக்குண்டு 4 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மாவனெல்ல – தேவனாகல்ல பகுதியில் இன்று அதிகாலை இந்த மண்சரிவு ஏற்ப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார்.

அத்துடன், காணாமல் போனவர்களை தேடும் பணிகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கபட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, கேகாலை மாவட்டத்தின் கலிகமுவ, மாவனெல்ல, கேகாலை, யட்டியாந்தோட்டை, ருவண்வெல்ல, தெரனியகலை, புலத்கோஹோபிட்டிய, தெஹியோவிட்ட, ரம்புக்கன, அரநாயக்க மற்றும் வரக்காபொல ஆகிய பிரதேச செயலக பிரிவிற்கு மஞ்சள்நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.