அடுத்தவாரம் பயணக் கட்டுப்பாட்டை தளர்த்துவது சாத்தியமா?

தற்போது நிலவுகின்ற சூழ்நிலைகளின் அடிப்படையில், அடுத்தவாரம் பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் சந்தேகம் இருப்பதாக, இலங்கை பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள போதும், அதிகபடியான மக்கள் நடமாட்டத்தைக் காணக்கூடியதாக இருக்கிறது.

நகர்பகுதிகளில் வாகன நெரிசல் காணப்பட்டது.

மக்கள் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் இருந்தால் மாத்திரமே அடுத்தவாரம் ஆகும்போது கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கையை குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைக்க முடியும்.

நாளாந்தம் மரணங்களும் அதிகரித்தவண்ணம் உள்ளன.

இந்தநிலையில் அடுத்தவாரம் பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது சாத்தியமா? என்ற கேள்வி எழுந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.