பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் காலப்பகுதியில் பொதுபோக்குவரத்து முன்னெடுக்கப்படுமா?

பயணக்கட்டுப்பாடு  எதிர்வரும் 21ம் திகதி தளர்த்தப்படுகின்ற நிலையில் தொடருந்து சேவைகள் மீள இடம்பெறவிருப்பதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடருந்து திணக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் காமினி செனவிரட்ண இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடருந்து சேவையின் போது, கடந்த காலங்களில் மாகாணங்களுக்கிடையே பின்பற்றப்பட்ட முறையே இந்த தடவையும் பின்பற்றப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 21ம் திகதி காலை பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, மீண்டும் எதிர்வரும் 23ம் திகதி இரவு 10 முதல் 25ம் திகதி அதிகாலை 4 மணி வரையில் பயணக் கட்டுப்பாடு அமுலாகும்.

எனினும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தடை தொடர்ந்தும் நிலவும்.

இந்நிலையில் பேருந்து சேவைகள் தொடர்பாக இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை என விடயத்துக்கு பொறுப்பான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.