இன்னும் இரண்டு மாதங்களுக்குள் இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம்

கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்தி இன்னும் இரண்டு மாதங்களுக்குள் நாட்டில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்படுமென அரசாங்கம் நம்புவதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி மேற்கொள்ளும் பொய்யான பிரசாரங்களால் மக்களை ஏமாற வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசு நாட்டு மக்களின் பிரச்சினைகள் குறித்து புரிந்து கொண்டு செயல்படும் என்றும் கூறினார். கொரோனாவின் மூன்றாவது அலை இன்று ஓரளவிற்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும், தற்போது நாடு முழுவதும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உலகெங்கிலும் உள்ள நாடுகள் இப்போது கொரோனாவைக் கட்டுப்படுத்துகின்றன மற்றும் சட்டங்களை தளர்த்துகின்றன, எனவே இன்னும் இரண்டு மாதங்களில் இலங்கை சாதாரணமாக செயல்பட அரசாங்கம் அனுமதிக்கும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

பொதுஜனபெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.