கடந்த 14 நாட்களுக்குள் அதிகளவிலான கொரோனா தொற்று நோயாளிகள் பதிவாகிய இடங்களை இலங்கையில் அதிக ஆபத்துள்ள பகுதிகளாக தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளில் அதிகளவில் பதிவாகிய நோயாளிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் குறித்த வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி முசலி, பலுகஸ்வேவ, சேருவில, செங்கலடி, காரைதீவு தெற்கு மற்றும் லொஹுகல போன்ற சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவுகள் குறைந்தளவான ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும் மாந்தை கிழக்கு வெலிஓயா போன்ற பகுதிகளில் கடந்து 14 நாட்களில் கொரோனா தொற்று நோயாளிகள் பதிவாகவில்லை என தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
ஏனைய சிவப்பு நிறத்தால் காட்டப்பட்டுள்ள பகுதிகளில் கடந்து 14 நாட்களில் அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் அதி அபாய வலயமாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
Post a Comment