நம்பிக்கையில்லா பிரேரணை சிறு பிள்ளையின் கடிதம் போல் உள்ளது - அமைச்சர் கம்மன்பில கிண்டல்.

தனக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சிறு பிள்ளையின் கடிதம் போல் பல பிழைகளை கொண்டுள்ளது என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “நிதி அமைச்சரின் இணக்கப்பாட்டின் படியே எரிபொருள் விலையை அதிகரிக்க முடியும். அமைச்சரவையின் அனுமதி தேவை இல்லை.

நான் அமைச்சராக பதவியேற்றது 2020 ஓகஸ்ட் மாதம். 2020 ஜனவரி மாதம் அல்ல என்பதை எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

இதில் கைச்சாத்திட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சட்டம் தொடர்பில் ஒன்றும் தெரியாது என்பது இதன் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லா பிரேரணை என்ற பெயரில் நம்பிக்கை பிரேரணை ஒன்றை கொண்டு வந்ததற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்”. எனக் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில், 30 நாடாளுன்ற உறுப்பினர்கள் இதுவரையில் கையொப்பமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 22ஆம் திகதி இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதா? இல்லையா? என்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கவில்லை என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி, இதுவரையில் தங்களுக்கு கிடைக்கவில்லை என ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அது தங்களுக்கு கிடைத்ததன் பின்னர், கட்சி என்ற அடிப்படையில் ஒன்றிணைந்து கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.