1390 என்ற நேரடி தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு, வீடுகளில் சிகிச்சை பெறும் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களை கண்காணிப்பதற்கான புதிய வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.
சுகாதார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
இதன்படி பிரதேச வைத்திய அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் நோயாளர்களை வகைப்படுத்தவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் விஷேட வைத்தியர்கள் உள்ளிட்ட குழுவினர் நாளாந்தம் தொலைபேசி ஊடாக வீடுகளில் சிகிச்சை பெறுபவர்களுடன் தொடர்பு கொள்வார்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Post a Comment