தொடரும் சீரற்ற காலநிலை - மண்சரிவில் சிக்கி மூவர் மாயம் - ஆறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கனமழையுடன் கூடிய காலநிலை காரணமாக இரத்தினபுரி, எல்லே ஆலயத்திற்கு அருகில் மண் மேடு சரிந்ததில், அதில் சிக்குண்டு மூன்று பேர் காணாமல் போயுள்ளனர் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் இன்று அதிகாலை நடந்துள்ளதாக அந்த நிலையம் கூறியுள்ளது.

மண் சரிவில் சிக்கி காணாமல் போனவர்களின் உடல்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை ஆறு மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையானது இன்று நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, களுத்துறை, காலி, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே தேசிய கட்டிட ஆராச்சி நிலையத்தினால் இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.