கொவிட் தொற்றினால் உயிரிழந்த 8 நாட்களான சிசு; கம்பளையில் சோக சம்பவம்.

கம்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 8 நாட்களேயான சிசுவொன்று கொவிட்19 தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளது.

கடந்த மே மாதம் 25 ஆம் திகதி பிறந்த இந்த சிசுவை 27 ஆம் திகதி வைத்தியசாலையிலிருந்து வீட்டுக்குள் அழைத்துசென்றுள்ளனர்.

வீட்டிற்கு அழைத்துச் சென்று சிசுவிற்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து சிசு உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிசுவிற்கு நடாத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொவிட் 19 தொற்றியுள்ளமை தெரியவந்துள்ளது.

பின்னர் சிகிச்சைப் பெற்று வந்த கம்பளை - புஸ்ஸல்லாவ பகுதியைச் சேர்ந்த குறித்த சிசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மேலும் மரணத்திற்கான காரணம் கொவிட் நிமோனியா என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது. 

பெற்றோரிடமிருந்து குழந்தைக்கு வைரஸ் பாதித்திருக்கலாம் என்று வைத்தியசாலை வைத்தியர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.