5000 ரூபா கொடுப்பனவு தொடர்பில் இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு

நடமாட்ட கட்டுப்பாடு காரணமாக தமது வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு நாடளாவிய ரீதியில் வழங்கப்பட்டு வருகின்றது.

சமுர்த்தி பயனாளிகள் தவிர்ந்த ஏனையோருக்கு 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கும்போது, முழுமையாக வாழ்வாதரத்தை இழந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதி, சுயதொழில், வணிக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் பெரும்பாலான மக்கள் தமக்கு நிவாரண தொகை கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டு விரைவில் அவர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படும் என தெரிவித்தார்.

அதேவேளை பாணதுறை பின்வத்த பகுதி வாழ் மீனவர்கள் நேற்றைய தினம் 5000 ரூபா நிவாரண தொகை வழங்குமாறு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.