தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறி ஏறாவூரிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பஸ்ஸொன்று கம்பஹா, மிரிஸ்வத்த பகுதியில் பொலிஸாரால் இன்று அதிகாலை தடுத்து நிறுத்தப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக குறித்த பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர் உட்பட 31 பயணிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த குழு இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
இதேவேளை சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 455 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 45,099 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment