நான்காவது தடவையாக 3000ஐக் கடந்தது நாளாந்த தொற்றாளர் எண்ணிக்கை.

நாட்டில் நாளாந்தம் இனங்காணப்படும் கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை கடந்த ஒரு மாத காலமாக உயர்வடைந்து செல்வதை காணக்கூடியதாகவுள்ளது. 

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2 இலட்சத்தை அண்மித்துள்ளது.

இந்நிலையில் இன்றைய தினமும் 3 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதோடு , பாராளுமன்ற பொலிஸார் மூவருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை செவ்வாயன்று 42 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன.

கொவிட் அச்சுறுத்தல் காரணமாக 14 ஆம் திகதி வரை போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டுள்ள போதிலும் இம்மாதம் 8 ஆம் திகதி முதல் மாத்தளை, நுவரெலியா, கேகாலை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, பதுளை, அநுராதபுரம், புத்தளம், அம்பாறை, மட்டக்களப்பு, மொனராகலை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் சைனோபார்ம் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னனெடுக்கப்படும் என்று இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

மேற்கூறிய மாவட்டங்களில் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் போது 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி தாய்மார் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு முன்னுரிமையளிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாகவும் இராணுவத்தளபதி தெரிவித்தார்.

இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்

இன்று புதன்கிழமை 3,306 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய இலங்கையில் தொற்றுறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 92 547 ஆக உயர்வடைந்துள்ளது.

இவர்களில் 94 532 தொற்றாளர்கள் புத்தாண்டின் பின்னர் உருவாகிய கொத்தணியில் இனங்காணப்பட்டவர்களாவர். இன்று 1504 பேர் தொற்றிலிருந்து முற்றாக குணமடைந்தனர். அதற்கமைய இதுவரையில் தொற்றுறுதி செய்யப்பட்டோரில் ஒரு இலட்சத்து 60 714 பேர் குணமடைந்துள்ளனர். 29 568 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று பதிவான கொரோனா மரணங்கள்

மேலும் 39 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,566 ஆக அதிகரித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.