நாட்டில் தற்போது அமுலிலுள்ள பயணக் கட்டுப்பாட்டை எதிர்வரும் ஜுன் 28ஆம் திகதி வரை நீடிப்பது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை கூடிய தேசிய பாதுகாப்பு சபையில் ஆராயப்பட்டுள்ளதாக இன்றைய தமிழன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில் மேலும்....
"கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டினால் கொரோனா தொற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறையின் உயர் மட்ட அதிகாரிகளினால் இந்த கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து நாட்டின் ஏனைய நடவடிக்கைகளை கருத்திற்கொண்டும் பயணக் கட்டுப்பாட்டினால் கொரோனா தொற்று வீழ்ச்சி மேலும் அதிகரிக்கலாம் என்ற காரணத்தினாலும், சுகாதாரத்துறையினரின் தொடர் வலியுறுத்தினாலும் தற்போது அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் 28ஆம் திகதி வரை நீடிப்பதற்கு தேசிய பாதுகாப்பு சபையில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
பயணக் கட்டுப்பாடு காலத்தில் முன்னெடுத்துச்செல்லும் வகையில் சில செயற்பாட்டுகளை முன்னெடுப்பதற்கும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது. குறிப்பாக ஒன்லைன் ஊடாக மக்களும் தேவையான பொருட்களை விநியோகிப்பதற்கும், பெருந்தோட்ட கூட்டுறவு நிலையங்களை தொடர்ந்தும் திறப்பதற்குமான நடவடிக்கைகள் குறித்து இதன் போது ஆராயப்பட்டுள்ளது.
அதன்படி 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளை 28ஆம் திகதி வரை நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக இதன் போது ஆராயப்பட்டுள்ளதோடு, இது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி தலைமையில் கூடும் கொவிட் கட்டுப்பாடு செயலணியின்போது இறுதி முடிவு எடுக்கப்படலாம். இந்த முடிவுகள் இன்று அல்லது நாளை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அறிய முடிகிறது."
Post a Comment