இலங்கையின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 200,000ஐ கடந்தது!! தற்போதைய நிலவரம் இதோ!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைக் கடந்துள்ளது.

நாட்டில் நேற்று மேலும் 3094 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 202,348ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த ஆயிரத்து 851 பேர் நேற்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறிய நிலையில், மொத்தமாக ஒரு இலட்சத்து 66 ஆயிரத்து 132பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

அத்துடன், கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 656ஆகப் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், 33ஆயிரத்து 746 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

அத்துடன் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 40 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,696 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் இதுவரை 19இலட்சத்து 20 ஆயிரத்து 801 பேருக்குச் செலுத்தப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது டோஸ் இதுவரை மூன்று இலட்சத்து 53ஆயிரத்து 894 பேருக்குச் செலுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.