வேகமாக பரவிவரும் டெல்டா வைரஸ் திரிபுடன் நாட்டின் மேலும் 15 பேர் அடையாளம்.

வேகமாக பரவி வரும் இந்திய கொவிட் வகை முதலில் அடையாளம் காணப்பட்ட தெமட்டகொடையில் மேலும் 15 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் எந்த வகையான கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை உறுதிப்படுத்த, சம்பந்தப்பட்ட மாதிரிகள் ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளது.

தெமட்டகொடை ஆரம வீதி பகுதியில் மொத்தம் 129 பேர் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 15 பேருக்கு கொவிட் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

டெல்டா வகை வைரஸ் தொற்றின் அபாயத்தை கருத்தில் கொண்டு தெமட்டகொடை ஆரம வீதிப்பகுதியில் உள்ள மக்களுக்கு இன்று(19) தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

"ஆராமை வீதிப்பகுதியில் உள்ள அனைத்து தோட்டமக்களுக்கும் தடுப்பூசி ஏற்ற நாங்கள் திட்டமிட்டுள்ளோம். ஏனெனில் இந்த பகுதியில் இந்திய வகை கொவிட் தொற்றாளர்கள் இனங்கனப்பட்டுள்ளனர். நேற்றைய பி.சி.ஆர் பரிசோதனைகளில் மேலும் 15 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பு பகுதியில் நேற்று எழுமாறாக நடத்திய பி.சி.ஆர் சோதனைகளில் இருந்து சுமார் 70 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்." என கொழும்பு மாநகராட்சி மன்றத்தின் தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் தினுகா குருகே தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.