14ஆம் திகதிக்கு பின்னரும் பயணக் கட்டுப்பாடு தொடருமா?

கொரோனா வைரஸ் தொற்று நிலையை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ளது.

இந்தக் கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதிவரை நடைமுறையில் இருக்கும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

14 ஆம் திகதிக்கு பின்னர் பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்படுமா என்பது குறித்து இதுவரை எந்தவித அறிவிப்பும் விடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், பயணக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மதித்து பொதுமக்கள் வீடுகளில் இருந்தால் எதிர்வரும் 14ஆம் திகதிக்கு பின்னர் நாட்டினை திறப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இந்த விடயத்தை இன்று (05) தெரிவித்துள்ளார்.

எனவே தனிமைப்படுத்தல் சட்டத்தை பாதுகாத்து கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார பிரிவினருக்கு ஆதரவு அளிக்குமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 975 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ​அவர் தெரிவித்தார்.

சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 22,950 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

மேலும், பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் காலப் பகுதியில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எச்சரித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.