சீரற்ற காலநிலையால் இதுவரை 10 பேர் பலி! 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!!

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் 10 பேர் உயிரிழந்துள்ளனர் – என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள நாளாந்த நிலைவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா, இரத்தினபுரி உட்பட 8 மாவட்டங்களில் 54,126 குடும்பங்களைச் சேர்ந்த 219,027 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

15,499 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 724 வீடுகள் பகுதியளவும், 11 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.

10 உயிரிழப்பு சம்பவங்களில் 8 சம்பவங்கள் சப்ரகமுவ மாகாணத்தில் பதிவாகியுள்ளன. (கேகாலை – 05, இரத்தினபுரி – 03)

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.