உடன் அமுலாகும் வகையில் நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தல்

நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட மேலும் ஏழு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலாவை கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் திருகோணமலை மாவட்டத்திற்குட்பட்ட அன்புவளிபுரம் மற்றும் உவர்மலை ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், நுவரெலியா மாவட்டத்திற்குட்பட்ட நீலடந்தஹின்ன கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் களுத்துறை மாவட்டத்திற்குட்பட்ட கிரிபெரிய கிராம உத்தியோகத்தர் பிரிவு என்பனவும் இன்று காலை 6.30 முதல் இவ்வாறு உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.