நாடு முடக்கப்படுமா..!: அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறியதென்ன..?

நாட்டில் 6 நாட்கள் முழுமையாக அமுல்படுத்தப்படவுள்ள போக்குவரத்து கட்டுப்பாடுகளை சுகாதார தரப்பினரின் கோரிக்கைக்கமைய மேலும் இரு வாரங்களுக்கு நீடிக்க வேண்டியேற்படுமா என்பது தொடர்பில் எதிர்வரும் புதன் அல்லது வெள்ளிக்கிழமை தீர்மானிக்கப்படும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

சுகாதார தரப்பினர் உள்ளிட்ட சகலரும் கூறுவதை நடைமுறைப்படுத்த வேண்டுமெனில் நாட்டிற்கு ஜனாதிபதி என்ற ஒருவர் தேவையில்லை. எனினும் சகல தரப்பினராலும் முன்வைக்கப்படுகின்ற கருத்துக்கள் தொடர்பில் ஜனாதிபதி அவதானம் செலுத்துகின்றார். அதன் காரணமாகவே ஊடகங்களில் தெரிவிக்கும் கருத்துக்களை தன்னிடம் நேரடியாகக் கூறுமாறு வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ச்சியாக இரு வாரங்கள் நாட்டை முடக்குமாறு கூறும் போது, அன்றாட தொழில் செய்து வருமானம் ஈட்டுபவர்கள் தொடர்பில் சிந்திக்க வேண்டும். அதற்கமையவே தீர்மானங்களையும் எடுக்க முடியும். எனவே அடுத்த வாரம் நிலைமை எவ்வாறிருக்கும் என்பதை நன்கு அவதானித்து அதன் பின்னரே அடுத்த கட்ட தீர்மானங்களை எடுக்க முடியும்.

நாட்டை முடக்குமாறு ஊடகங்கள் ஊடாக மக்களுக்கு கூறுவதில் பிரயோசனமில்லை. இவ்விவகாரத்தில் அரசியல் மற்றும் ஏனைய காரணிகளை தவிர்த்து அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். சுகாதார தரப்பினர் நாட்டின் மீதுகொண்டுள்ள அக்கறையை வரவேற்கின்றோம். அவற்றுக்கு மதிப்பளிக்கின்றோம். எனவே அவர்களின் கோரிக்கைக்கு அமைய அடுத்த இரு வாரங்களுக்கு நாட்டை முடக்க வேண்டியேற்படுமா என்பது தொடர்பில் புதன் அல்லது வெள்ளிக்கிழமை தீர்மானிக்க முடியும் என்றார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.