கொழும்பு பெரிய பள்ளிவாசல் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்.

ஹிஜ்ரி 1442 புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு இன்று 12ஆம் திகதி புதன் கிழமை மாலை மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெறவுள்ளது.

எனவே தலைப்பிறை தொடர்பான ஊர்ஜிதமான தகவல்கள் கிடைக்கப் பெறும் பட்சத்தில் அது தொடர்பாக தகவல்களை 0112432110, 0112451245, 0777316415 என்ற தொலைப் பேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொண்டு அறியத் தருமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாக சபையின் பொதுச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழுத் தலைவர் கலீபதுல் குலபா மௌலவி ஜே அப்துல் ஹமீத் பஹ்ஜி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் ஏகமனதான தீர்மானம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானம் முஸ்லிம் சேவையின் ஊடாக உத்தியோகபூர்மாக நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் அதன் பிறைக் குழு உறுப்பினர்கள், முஸ்லிம் சமய கலாச்சார திணைக்கள அதிகாரிகள், இலங்கை வலிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள், மேமன், ஹனபி பள்ளிவால் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

நாட்டில் தற்பொழுது கொவிட் 19 வைரஸ் அச்சுறுத்தல் காணப்படுவதால் அதனால் ஏற்படும் பாதிப்பை கருத்திற் கொண்டு சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இன்றைய இந்த மாநாட்டில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.