நாட்டில் சீரற்ற வானிலை! வெள்ள நீரில் மூழ்கிய முக்கிய பல பகுதிகள் – இருவர் உயிரிழப்பு!

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணமாக, களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, கொழும்பு, வத்தளை, பியகம, கொலன்னாவை, கடுவளை, சீதாவாக்கை, தொம்பே, ருவான்வெல்ல, தெஹியோவிட்ட முதலான பகுதிகளில் கங்கையை அண்டி வாழும் மக்கள் வெள்ளப் பெருக்கு நிலை குறித்து அவதானத்துடன் இருக்க வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, பியகம – களனி வீதி பட்டிவில் சந்தியில் நீரில் மூழ்கியுள்ளது.

இதனால், அவ்வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தொிவித்துள்ளது.

மேலும், வரக்காபொல, கஸ்னாவ பிரதேசத்தில் இரு வீடுகளின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார்.

மேலும், அவிசாவளை, ருவன்வெல்ல பிரதேசத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, உடுகம, அளுத்வத்த பிரதேசத்தில் கிங் கங்கையின் கிளையாற்றின் மேலாக அமைந்துள்ள பாலமொன்றில் பயணித்துக் கொண்டிருந்தபோது, ஆற்றுவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 25 வயதான நபரொவருவர் காணாமல்போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அந்நபரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருவதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக ருவன்வெல்ல பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கியிருந்த 4 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

நேற்று நள்ளிரவு முன்னெடுக்கப்பட்ட இந்த மீட்பு நடவடிக்கை சுமார் 2 மணித்தியாலங்களாக நீடித்திருந்தது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.