கொழும்பு துறைமுகத்தில் தீ பரவிய கப்பலில் வெடிப்பு - இருவர் காயம்.

கொழும்பு துறைமுகத்துக்கு வடமேல் திசையில் நங்கூரமிட்டுள்ள எக்ஸ் - பிரஸ் பேர்ல் கப்பலில் இன்று (25) காலை மீண்டும் தீப்பற்றியதை அடுத்து வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து குறித்த கப்பலின் பணிக்குழாமைச் சேர்ந்த இரண்டு பேர் காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்த கப்பலின் பணிக்குழாமைச் சேர்ந்த 25 பேரும் இலங்கைக் கடற்படையினரால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தீப்பற்றியதை அடுத்து அந்தக் கப்பலில் இருந்த 8 கொள்கலன்கள் கடலில் வீழ்ந்திருப்பதாக, இலங்கை கடற்சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.