நாட்டில் இதுவரை நல்லடக்கம் செய்யப்பட்ட கொரோனா சடலங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி.

கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிக்கும் நபர்களை ஓட்டமாவடியில் அடக்கம் செய்ய அனுமதியளிப்பட்டதைத் தொடர்ந்து அங்கு இதுவரை 101 பேரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

கோறளைப்பற்று மேற்கு - ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மஜ்மா நகர் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட காணியில் கொரோனா தொற்றினால் மரணிக்கும் நபர்களை அடக்கம் செய்யும் பணிகள் கடந்த மார்ச் மாதம் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

கடந்த புதன்கிழமை (5) நல்லடக்கம் செய்யப்பட்ட எட்டு ஜனாஸாக்களுடன் கடந்த இரண்டு மாதங்களுக்குள் இதுவரை 101 கொரோனா தொற்றாளர்களின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.

இதில் 98 முஸ்லிம்களின் ஜனாஸாக்களும் 2 கிறிஸ்தவர்களின் சடலமும் 1 பெளத்தரின் சடலம் உள்ளடங்களாக 101 நபர்களின் உடல்கள் அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளளதாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.