இலங்கையின் முக்கிய அரச இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்.

இலங்கையின் முக்கிய 4 அரச இணையத்தளங்கள் மீது இன்று காலை சைபர் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் இலங்கை கணினி அவசரப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கான சீன தூதரக அலுவலகத்தின் இணையத்தளம், சுகாதார அமைச்சு, மின்சக்தி அமைச்சு மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் இவ்வாறு சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எனினும் தற்போது இவை சீர்ப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இவ்வாறு நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாகவும் இலங்கை கணினி அவசரப்பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று மே 18 முள்ளிவாய்க்கால் தினத்தை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் சைபர் கிரைம் பிரிவு இந்த தாக்குதலை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.