இலங்கை வட்ஸ்அப் பாவனையாளர்களுக்கு அவசர அறிவிப்பு.

தவறுதலாக 6 இலக்கங்களை கொண்ட தகவல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்து வாட்ஸ் அப் (WhatsApp) மூலம் தகவலொன்று உங்களது கையடக்கத் தொலைபேசிக்கு கிடைக்குமாக இருந்தால், அதற்கு பதிலளிக்க வேண்டாம் என இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு, பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

டுவிட்டர் தகவலொன்றை வெளியிட்டு, இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

தமக்கு அறிந்த ஒருவரின் தொலைபேசி இலக்கத்திலிருந்து இந்த தகவல் கிடைக்குமாக இருந்தால், அந்த தகவலானது குறித்த நபர் அறியாத வகையிலேயே அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிடுகின்றது.

இதனால், தமது வாட்ஸ் அப் (WhatsApp) கணக்கை பாதுகாத்துக்கொள்வதற்காக ”2 factor authentication” ஐ செயற்படுத்திக் கொள்ளுமாறும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு, வாட்ஸ் அப் (WhatsApp) பயன்பாட்டாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.