இந்தியாவில் பரவும் கொரோனா வைரஸ் இலங்கைக்குள் பிரவேசம்...!

இந்தியாவில் பரவி வரும் உரு திரிபடைந்த B1.617 என்ற கொவிட் தொற்றுறுதியான நபரொருவர் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் கொழும்பு தனிமைப்படுத்தல் மையமொன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் போது மேற்கொள்ளப்பட்ட பிஸிஆர் பரிசோதனையின் போது இனங்காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வைரஸ் முதற்தடவையாக இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.