கொவிட் அறிகுறிகளை ஒத்த அறிகுறிகளுடன் வேறு நோயாளர்கள் : நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக கொவிட் தொற்று அறிகுறியை ஒத்த அறிகுறிகளைக் கொண்டு ஏனைய நோயாளர்களும் காணப்படுவதால் தொற்றினை கண்டறியக் கூடிய பரிசோதனைகளை மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர் வைத்தியர் பிரசாந்த் கொலம்பகே தெரிவித்தார்.

ஒரே அறிகுறிகளுடன் இரு வேறுபட்ட நோயாளர்கள் காணப்படுகின்றனர். எனவே பரிசோதனைகளின் பின்னரே இவர்களை வேறுபடுத்தக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

மழையுடனான காலநிலையால் டெங்கு உள்ளிட்ட ஏனைய வைரஸ் நோய் பரவக் கூடிய அபாயமும் காணப்படுகிறது. இது தொடர்பிலும் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என்றும் வைத்தியர் பிரசாந்த் கொலம்பகே சுட்டிக்காட்டினார்.

இதே வேளை கடந்த 3 நாட்களாக 30 இற்கும் அதிகமான கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட 36 கொவிட் மரணங்களில் 7 மரணங்கள் அன்றைய தினத்தில் பதிவானவையாகும். ஏனைய 29 மரணங்களும் மே மாதம் 02 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை பதிவானவையாகும்.

இந்நிலையில், 2021 மே மாதம் 30 ஆம் திகதி 07 கொவிட் மரணங்கள் இடம்பெற்றதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார். மேலும், மே மாதம் 02 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை கொவிட் நோயாளர்களில் 29 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மே 02 ஆம் திகதி 01 மரணமும், மே 06 ஆம் திகதி 01 மரணமும், மே 07 ஆம் திகதி 01 மரணமும், மே 11 ஆம் திகதி 01 மரணமும், மே 12 ஆம் திகதி 01 மரணமும், மே 17 ஆம் திகதி 01 மரணமும், மே 19 ஆம் திகதி 02 மரணங்களும், மே 21 ஆம் திகதி 01 மரணமும், மே 24 ஆம் திகதி 01 மரணமும், மே 25 ஆம் திகதி 03 மரணங்களும், மே 26 ஆம் திகதி 02 மரணங்களும், மே 27 ஆம் திகதி 03 மரணங்களும், மே 28 ஆம் திகதி 05 மரணங்களும், மே 29 ஆம் திகதி 06 மரணங்களும் பதிவாகியுள்ளன. அதற்கமைய இலங்கையில் பதிவாகியுள்ள கொவிட் 19 தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1441 ஆகும்.

இதேவேளை நேற்று ஞாயிறுக்கிழமை 2849 பேருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டது. அதற்கமைய நாட்டில் இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 83 442 ஆகும்.

இவர்களில் 85 623 தொற்றாளர்கள் புத்தாண்டின் பின்னர் உருவான கொத்தணியில் இனங்காணப்பட்டவர்களாவர்.

இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் ஒரு இலட்சத்து 48 390 பேர் முழுமையாக குணமடைந்துள்ளதோடு , 30 899 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஞாயிறுக்கிழமை காலை வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை பராமறிப்பு நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்த 2029 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடுகளுக்குச் சென்றனர்.

அத்தோடு ஹோட்டல்களிலும் முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் 58 தனிமைப்படுத்தல் நிலையங்களிலும் 4738 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.