வீட்டிலிருந்து வெளியேறிய கொவிட் நோயாளி- பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

பொரள்ளை – மெகசின் வீதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கொரோனா நோயாளராக அடையாளம் காணப்பட்ட பின்னர் அவரது வீட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

28 வயதுடைய குறித்த இளைஞருக்கு கடந்த 26ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி நேற்றைய தினம் பொரள்ளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் சுகாதார பிரிவினருடன் குறித்த நபரை சிகிச்சை மத்திய நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்காக அவரது வீட்டுக்கு சென்றபோது அவர் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் தமக்கு அறியத்தருமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொரள்ளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி -071 85 91 587

பொரளை பொலிஸ் நிலையம் – 011 26 94 019

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.