பொருட்களை கொள்வனவு செய்ய ஒற்றைச் சில்லு வண்டியில் சென்ற நபர் கைது.

இன்று (25) பயணத்தடை தளர்த்தப்பட்டுள்ள நிலையில், தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வீடுகளில் இருந்து ஒருவர் மாத்திரமே அருகிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு சென்றுவர முடியுமெனவும், வாகனங்களின் மூலமாக பயணிக்க முடியாது எனவும் அரசாங்கம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், குறித்த அறிவுறுத்தலுக்கு அமைவாக இன்று பேருவளை பகுதியைச் சேர்ந்த நபரொருவர் கொள்வனவு செய்த பொருட்களை ஒற்றைச் சில்லுவண்டியில் வைத்துக்கொண்டு வீடு திரும்பிய காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்தன.

குறித்த நபர் முகக்கவசம் அணியாமல் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக ஒற்றைச் சில்லு வண்டியை எடுத்துச் சென்றுள்ள விடயமறிந்த பொலிஸார் இன்று அவரை கைது செய்துள்ளனர்.

அளுத்கம, தர்கா நகரை சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டு தொடர்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.