அசாத் சாலி அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அசாத் சாலியின் உடல் நிலை தொடர்பில் அவரது சட்டத்தரணி கௌரி தவராசா சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு சென்றதை அடுத்து, அவர் நேற்று (18) கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அவர் தொடர்பிலான பரிசோதனைகள் இன்று இடம்பெற்றன.

அதனையடுத்து, சிகிச்சைகளுக்காக அவர் தேசிய வைத்தியசாலையின் இருதய அவசர சிகிச்சை பிரிவில் இன்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.