நாடளாவிய ரீதியில் பயணத்தடை : வீடுகளில் நோன்புப் பெருநாளை கொண்டாடிய முஸ்லிம்கள்!

கொரோனா அச்சுறுத்தலையடுத்து நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமது வீடுகளுக்குள்ளேயே - சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, இம்முறை நோன்புப் பெருநாளை முஸ்லிம் மக்கள் கொண்டாடினார்கள்.

அத்துடன், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் முழுமையாக நீங்கி, பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து, நாடு மீண்டும் வழமைக்கு திரும்ப வேண்டும் எனவும் அவர்கள் இறைவனிடம் கேட்டுக்கொண்டனர்.

‘ஈதுல் பித்ர்’ எனப்படும் ஈகைத் திருநாளானது சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் இவ்வுலகில் பரப்பும் நோக்கில் இஸ்லாமியர்கள் கொண்டாடும் ஒரு உன்னத பெருநாளாகும்.

இஸ்லாமியர்களுக்கு ஐம்பெரும் கடமைகள் உண்டு. அதில் ஒன்று, ரமழான் நோன்பு. ஆண்டுதோறும் ரமழான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகின்றது.

முப்பது நாட்கள் உண்ணாமல், பருகாமல், நோன்பிருந்து இறைவனை விழித்திருந்து, தனித்திருந்து, இறைமறையை தினம் ஓதி, இல்லாதவருக்கு ஈந்து இறைவழிபாட்டில் முழுமையாக தன்னை ஈடுபடுத்தி அதன் இறுதியாக இன்பமுடன் பெருநாளை கொண்டாடுகின்றனர் முஸ்லிம்கள்.

இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் கடுமையாக உள்ள நோன்புப் பெருநாள் நாளில் முஸ்லிம் மக்கள் வீட்டுக்குள் இருந்து சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தொழுகையில் ஈடுபட்டு பெருநாளை அமைதியாகக் கொண்டாடியுள்ளார்கள்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.