கடுமையான கட்டுப்பாடுகளுடன் புதிய சுகாதார வழிகாட்டி வெளியானது

இலங்கையில் தற்போதைய கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு பின்பற்றப்படவேண்டிய புதிய சுகாதார வழிகாட்டி சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த சுகாதார வழிகாட்டியில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களைத் தவிர வைத்தியசாலைகளில் உயிரிழக்கும் ஏனையோரின் இறுதிக்கிரியைகள் 24 மணித்தியாலத்திற்குள் இடம்பெற வேண்டும் எனவும் அதிகபட்சமாக 25 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் எனவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அரசாங்க ஊழியர்கள் பொது நிர்வாகம் உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி. அமைச்சு வெளியிட்ட சுற்றறிக்கைக்கு அமைவாக வருகைத்தர வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

தனியார்துறை ஊழியர்களில் குறைந்தளவானோர் அலுவலகத்திற்கு சமூகமளிக்க வேண்டுமெனவும், ஏனையோர் வீடுகளில் இருந்து பணிபுரியுமாறும் புதிய சுகாதார வழிகாட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்து சேவைகளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைவாக மாத்திரமே பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.