கிராம அலுவலர் பதவிகளுக்கான விண்ணப்பம் கோரல் - முழு விபரம் உள்ளே…!

நாடளாவிய ரீதியில் உள்ள பிரதேச செயலகங்களில் வெற்றிடமாகக் காணப்படும் கிராம அலுவலர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, வெற்றிடமாகக் காணப்படும் கிராம அலுவலர் பிரிவுகளுக்கு கிராம அலுவலர்களை நியமிப்பதற்காக தகுதியுடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அத்துடன், கிராம அலுவலர் பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தகவல்கள் மற்றும் மாதிரி விண்ணப்பம் ஆகியன அடங்கிய அறிவித்தல், 28 ஆம் திகதியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும், கிராம அலுவலர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் பரீட்சைகள் திணைக்களத்தினால் நடத்தப்படவுள்தாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 21 வயதுக்குக் குறையாத மற்றும் 35 வயதுக்கு மேற்படாத ஆண், பெண் இரு பாலாரும், வெற்றிடமாகக் காணப்படும் கிராம அலுவலர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்ப இறுதித் திகதிக்கு முன்னரான 6 வருட காலப்பகுதிக்குள் விண்ணப்பதாரி, தான் பதவியேற்பதற்கு எதிர்பார்க்கும் பிரதேச செயலக பிரிவினுள் 3 வருடங்கள் நிரந்தரமாக வசித்திருக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில், முதல் மொழியாக தமிழ் அல்லது சிங்களத்துடன், கணிதம் உள்ளிட்ட 4 பாடங்களில் திறமைச் சித்தியுடன், ஒரே அமர்வில் 6 பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், க.பொ.த உயர்தரப் பரீட்சையில் பொது அறிவு மற்றும் ஆங்கிலம் தவிர்ந்த ஏனைய பாடங்களில் ஒரே அமர்வில் சித்தியடைந்திருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஜுன் 28 ஆம் திகதிக்கு முன்னர், குறித்த விண்ணப்பங்களை பதிவுத் தபாலில் அனுப்பி வைக்குமாறும், உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் வர்த்தமானி அறிவித்தல் இணைப்பு:

தமிழ் வர்த்தமானி அறிவித்தல் - 28.05.2021

விண்ணப்ப படிவம் இணைப்பு:

தமிழ் விண்ணப்ப படிவத்திற்கு 

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.