இராணுவத் தளபதி விடுத்துள்ள விசேட அறிவுறுத்தல் - பொதுமக்களின் கவனத்திற்கு.

தற்போது அமுலில் உள்ள நடமாட்டக் கட்டுப்பாடு எதிர்வரும் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணிமுதல் நீக்கப்படவுள்ளது.

இந்த நடமாட்டக்கட்டுப்பாடு நீக்கப்பட்டதன் பின்னர், தேவையற்ற பயணங்கள் எதனையும் மேற்கொள்ளாமல் உணவு மற்றும் மருந்து பொருட்களை கொள்வனவு செய்ய, அருகிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு மாத்திரமே பொதுமக்கள் செல்லவேண்டும் என கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

அத்துடன், இதன்போது ஒருவர் மாத்திரமே வீடுகளிலிருந்து வெளியே செல்லவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நடமாட்டக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் காலப்பகுதியினுள் உணவுபொருள் விற்பனை நிலையம், மருந்தகம், எாிபொருள் நிரப்பு நிலையம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் மாத்திரமே திறக்க அனுமதி வழங்கப்படும்.

இதேவேளை, 25 ஆம் திகதி இரவு 11 மணிமுதல் 28 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படவுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.