பயணக் கட்டுப்பாடு காலப்பகுதியில் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வது எவ்வாறு?

பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படாமல், தொடர்ந்தும் ஜூன் 7 ஆம் திகதிவரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப்பகுதியில் மாவட்ட அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் ஏற்பாட்டில் வாகனங்கள் ஊடாக அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கே விநியோகிக்க அறுவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

முன்னதாக எதிர்வரும் மே 31 மற்றும் ஜூன் 4 ஆம் திகதிகளில், அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்துகொள்வதற்காக பயணக் கட்டுப்பாட்டை தற்காலிகமாக தளர்த்துவதாக தீர்மானிக்கப்பட்டது.

எனினும், குறித்த தீர்மானம் தற்போது ரத்து செய்யப்பட்டு பயணக் கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.