கௌரவ பிரதமரின் வழிகாட்டலின் கீழ் சகல பள்ளிவாயல்களிலும் கொவிட்டிலிருந்து நிவாரணம் வேண்டி எதிர்வரும் சனிக்கிழமை(08) மாலை 5.46 மணிக்கு விஷேட துஆப் பிரார்த்தனை ஒழுங்கு செய்யப்பட வேண்டும் என முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் சகல பள்ளிவாசல்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த துஆப் பிரார்த்தனையில் கொவிட் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இமாம், முஅத்தின் உட்பட பள்ளிவாசல் ஊழியர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் எனவும் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் பொதுமக்கள் வீட்டிலிருந்தவாறு பிரார்த்தனைகளில் ஈடுபட ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment