அனைத்து மாவட்டங்களிலும் தொற்றாளர்கள் அடையாளம் – அதிகளவான கொரோனா மரணங்கள் நேற்று பதிவு

நாட்டில் நேற்றைய தினம் 25 மாவட்டங்களிலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, நாட்டில் இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து ஒன்பது பேர் நேற்று தொற்றுடன் அடையாளங் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொழும்பு மாவட்டத்தில் நேற்று 556 தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டதையடுத்து, கொழும்பு மாவட்டத்தில் இதுவரை தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 45 ஆயிரத்து 233 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, களுத்தறை மாவட்டத்தில் 407 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 354 பேரும், காலி மாவட்டத்தில் 233பேரும், குருநாகல் மாவட்டத்தில் 207 பேரும் தொற்றுடன் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இதனிடையே, வட மாகாணத்திற்கு உட்பட்ட யாழ்ப்பாண மாவட்டத்தில் 75 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 46 பேரும், முல்லைதீவு மாவட்டத்தில் 24 பேரும், வவுனியா மாவட்டத்தில் 10 பேரும், மன்னார் மாவட்டத்தில் 19 பேரும் நேற்று தொற்றுடன் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்துக்கு உட்பட்ட திருகோணமலை மாவட்டத்தில் 99 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 46 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 05 பேரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை நேற்றைய தினம் உறுதி செய்யப்ப்பட்டுள்ளது.

மேலும், பதுளை மாவட்டத்தில் 60 பேரும், நுவரெலிய மாவட்டத்தில் 80 பேரும், மொனராகலை மாவட்டத்தில் 12 பேரும், கண்டி மாவட்டத்தில் 157 பேரும் தொற்றுடன் அடையாளங் காணப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவிக்கின்றது.

அத்துடன், நாட்டின் ஏனைய மாவட்டங்களிலும் இவ்வாறு கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில், ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 242 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, அவர்களில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து தொள்ளாயிரத்து 95 பேர் இதுவரை குணமடைந்துள்ள நிலையில், 33 ஆயிரத்து 69 பேர், வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் 46 கொரோனா உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டதையடுத்து, இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 178 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.