பயணக் கட்டுப்பாட்டை மீறியோரை காட்டிக் கொடுத்தது ட்ரோன்!

பயணக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களைக் கண்டறிந்து கைது செய்வதற்காக கொழும்பு - வாழைத்தோட்டம், மாலிகாவத்தை, மற்றும் கிராண்ட்பாஸ் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ட்ரோன் கண்காணிப்பு நடவடிக்கையின்போது நேற்று குறைந்தது 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 20 பேர் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

கொழும்பு மற்றும் சனநெரிசல் அதிகமாகவுள்ள பகுதிகளில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறுவோரை கண்காணிக்க நேற்றுமுதல் ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படும் என பொலிஸ் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன முன்னதாக எச்சரித்தார்.

ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்தி தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோரைக் கண்காணிக்கும் பணியில் விசேட பணிக்குழுவினர் மற்றும் பொலிஸார் நேற்று முதல் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ட்ரோன் கண்காணிப்பு இன்றும் கொழும்பு மற்றும் புறநகர்ப்பகுதிகளில் தொடரும் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளாா்.

இதேவேளை சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறியமைக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரப் பகுதியில் 636 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்காக ஒரே நாளில் அதிகளவான கைதுகள் இடம்பெற்றுள்ளமை இதுவே நாட்டில் முதல் சந்தர்ப்பமாகும்.

கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக மொத்தம் 12,748 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.