தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா ஜனாஸாக்கள் - ஓட்டமாவடி காணியில் இடப்பற்றாக்குறை ஏற்படலாம் என அச்சம்.

நாட்டில் கொவிட் தொற்­றினால் உயி­ரி­ழப்­ப­வர்­களின் எண்­ணிக்கை நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரும் நிலையில் ஓட்­ட­மா­வடி பிர­தே­சத்தில் அடக்கம் செய்­வ­தற்­கென கொண்டு வரப்­படும் ஜனா­ஸாக்­களின் எண்­ணிக்­கை­யிலும் சடு­தி­யான அதி­க­ரிப்பு ஏற்­பட்­டுள்­ளது.

கடந்த சனிக்­கி­ழமை மாத்­திரம் 19 ஜனா­ஸாக்கள் ஓட்­ட­மா­வடி, மஜ்மா நகரில் அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ளன. கடந்த மார்ச் 5 ஆம் திகதி முதல் இப் பகு­தியில் ஜனா­ஸாக்கள் அடக்கம் செய்­யப்­பட்டு வரு­கின்ற நிலையில், ஒரே நாளில் அதிக எண்­ணிக்­கை­யி­லான ஜனா­ஸாக்கள் கடந்த சனிக்கிழமையே அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

இதே­வேளை, கொரோனா வைரஸ் தொற்­றுக்­குள்­ளாகி மர­ணித்­த­வர்­களின் 156 உடல்கள் கோற­ளைப்­பற்று மேற்கு, ஓட்­ட­மா­வடி பிர­தேச சபைக்­குட்­பட்ட மஜ்மா நகர் பகு­தி­யி­லுள்ள காணியில் நேற்று முன்­தினம் வரை நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக கோற­ளைப்­பற்று மேற்கு ஓட்­ட­மா­வடி பிர­தேச சபை தவி­சாளர் ஏ.எம்.நௌபர் தெரி­வித்தார்.

இதில், 143 முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்­களும் 6 கிறிஸ்­த­வர்­களின் சட­லங்­களும், 6 இந்­துக்­களின் சட­லங்­களும், 1 பௌத்­தரின் சட­லமும் உட்­பட 156 நபர்­களின் உடல்கள் அங்கு நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டுள்­ளன.

இவற்றுள் நைஜீ­ரியா மற்றும் இந்­தியா ஆகிய நாடு­களைச் சேர்ந்த இரு­வரின் உடல்­களும் இங்கு நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இதே­வேளை கடந்த சில நாட்­க­ளாக அடக்கம் செய்­வ­தற்­கென கொண்டு வரப்­படும் உடல்­களின் எண்­ணிக்­கையில் சடு­தி­யான அதி­க­ரிப்பு ஏற்­பட்­டுள்­ள­தாக ஜனாஸா அடக்கம் செய்யும் பணியில் ஈடு­பட்­டுள்ள ஊழி­யர்கள் குறிப்­பி­டு­கின்­றனர்.

இத­னி­டையே குறித்த காணியில் மேலும் 100 க்கு உட்­பட்ட ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்­வ­தற்­கான நிலப்­ப­கு­தியே மீத­முள்­ள­தாக கோற­ளைப்­பற்று மேற்கு ஓட்­ட­மா­வடி பிர­தேச சபை தவி­சாளர் ஏ.எம்.நௌபர் தெரி­வித்தார்.

கொவிட் ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்­வ­தற்­கென சுகா­தார அமைச்­சினால் ஓட்­ட­மா­வடி மஜ்மா நகரில் அடை­யாளம் காணப்­பட்டு அனு­ம­தி­ய­ளிக்­கப்­பட்ட காணியில் மாத்­தி­ரமே இது­வரை ஜனா­ஸாக்கள் அடக்கம் செய்­யப்­ப­டு­கின்­றன. நாட்டின் எப் பகு­தியில் கொவிட் மர­ணங்கள் நிகழ்ந்­தாலும் அடக்கம் செய்ய விரும்பும் முஸ்­லிம்கள் மற்றும் முஸ்­லி­மல்­லா­த­வர்­களின் சட­லங்கள் இப் பகு­திக்கே கொண்­டு­வந்து அடக்கம் செய்­யப்­ப­டு­கின்­றன.

தற்­போது நாட்டில் கொவிட் மூன்­றா­வது அலை வேக­மாக பரவி வரு­வதால் தின­சரி தொற்­றுக்­குள்­ளா­கின்­ற­வர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ள­துடன் மர­ணிப்­ப­வர்­களின் எண்­ணிக்­கையும் சடு­தி­யாக அதி­க­ரித்­துள்­ளது. இதன் கார­ண­மாக அடுத்த சில தினங்­களில் மேலும் பல ஜனா­ஸாக்கள் இப் பகு­திக்கு அடக்­கத்­திற்­காக கொண்­டு­வ­ரப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இந் நிலையில் குறித்த காணியில் மேலும் 80 முதல் 100 வரை­யான ஜனா­ஸாக்­க­ளையே அடக்கம் செய்ய இட­மி­ருப்­பதால் ஏனைய பிர­தே­சங்­களில் பொருத்­த­மான காணியை அடை­யாளம் கண்டு அவற்றில் அடக்கம் செய்­வ­தற்­கான ஏற்­பா­டு­களை சுகா­தார அமைச்சு முன்­னெ­டுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முஸ்லிம்களின் மரண வீதமும் அதிகரித்துள்ளதால் தேவைக்காகவன்றி வெளியில் வருவதை தவிர்க்குமாறும் உரிய சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி நடக்குமாறும் சமூகத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.