நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் தற்போதைய நிலவரம் குறித்து வெளியான செய்தி.

நாட்டில் கொவிட் தொற்றின் தீவிர நிலைமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று தினங்களாக நாளொன்றில் அதிகூடிய மரணங்கள் பதிவாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் நேற்று வெள்ளிக்கிழமை மாத்திரம் 44 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன.

இம்மாதம் 2 ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் வியாழக்கிழமை வரை கொவிட் தொற்றால் குறித்த 44 பேரும் உயிரிழந்துள்ளனர். அதற்கமைய இலங்கையில் பதிவாகியுள்ள கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 1,132 ஆகும்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 21 - 71 வயதுக்கு மேற்பட்ட அட்டவீரகொல்லாவ, ஹொரம்பல்ல, அம்பலாங்கொட, கலல்கொட, ஹிற்தகல, புலத்சிங்கள, ஹொரண, கல்பாத்த, குடாவஸ்கடுவ, பிஹிம்புவ, அநுராதபுரம், மன்னார், ரத்கம, இமதூவ, மக்கொன, மத்துகம, வேயங்கொட, அத்துருகிரிய, செவனகல, மல்லாவ, கிரிமெட்டியாவ, மேல் கட்டுனேரிய, கண்டி, பரகஸ்தோட்டை, களுத்துறை, வடக்கு வலல்லாவிட்ட, பேருவளை, பயாகல, கொழும்பு 12, கொழும்பு 2, பொல்கஸ்ஓவிட்ட, காலி, நாக்கவத்த, றாகம, பன்னிபிட்டி, ஹோமாகம, நாரங்கொட, கனேபொல, கொக்கரல்ல, அலஹிட்டியாவ, ஹிந்தகொல்ல மற்றும் பண்டாரகொஸ்வத்த ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

நேற்று வெள்ளிக்கிழமை நாட்டில் 3,547 பேருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டது. இவர்களில் 9 பேர் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்களாவர். எஞ்சிய 3,538 தொற்றாளர்களும் உள்நாட்டைச் சேர்ந்தவர்களாவர்.

நேற்று கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவானோருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டது. இம்மாவட்டத்தில் பதிவான தொற்றாளர் எண்ணிக்கை 800 ஆகும். இதே போன்று கம்பஹாவில் 617 பேருக்கும், குருணாகலில் 297 பேருக்கும், களுத்துறையில் 280 பேருக்கும், காலியில் 278 பேருக்கும், கண்டியில் 172 பேருக்கும், மாத்தளையில் 118 பேருக்கும் , கேகாலையிலும் மாத்தறையிலும் தலா 109 பேருக்கும், அநுராதபுரத்தில் 108 பேருக்கும் நேற்று தொற்றுறுதி செய்யப்பட்டது. எஞ்சிய 650 தொற்றாளர்களும் ஏனைய மாவட்டங்களிலிருந்து இனங்காணப்பட்டனர்.

அதற்கமைய இன்று காலை வரை நாட்டில் ஒரு இலட்சத்து 58, 332 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இவர்களில் 61, 341 தொற்றாளர்கள் புத்தாண்டின் பின்னர் ஆரம்பமான கொத்தணியில் இனங்காணப்பட்டவர்களாவர். இவ்வாறு இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 1,25,359 பேர் முழுமையாக குணமடைந்துள்ளதோடு, 31, 841 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று காலை 1,828 பேர் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.