உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள புதிய அறிவிப்பு.

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் மே 5 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

முன்னதாக இப் பரீட்சை முடிவுகளை ஏப்ரல் 30க்கு முன்னர் வெளியிடப்படும் என அறிவித்திருத்தது.

2020 உயர்தரப் பரீட்சை முடிவுகள் இறுதி கட்டத்தில் உள்ளன. முடிவுகளை வெளியிடுவதற்கு முன்பு, கணக்கிடப்பட்ட Zscores மதிப்பெண்கள் இருமுறை சரிபார்க்கப்பட வேண்டும் என்று பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் கூறியுள்ளன.

அந்த நடவடிக்கை தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. செயல்முறை முடிந்ததும் முடிவுகளை மே 5 அல்லது அதற்கு முன்னர் வெளியிட முடியும் என்றும் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

முடிவுகள் வெளியானதும் மாணவர்கள் கல்வியமைச்சின் உத்தியோகபூர்வ வலைத்தளமான www.doenets.lk என்பவற்றில் பார்வையிடலாம்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.