நாளை முதல் எதிர்வரும் மூன்று தினங்களில் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் நாளை முதல் எதிர்வரும் மூன்று தினங்களில் 100 முதல் 150 மில்லிமீற்றர் அளவில் பலத்தமழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், மழைபெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என அந்த திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதனால் பொதுமக்கள் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்துக்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில பாகங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலி, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.