உடன் அமுலாகும் வகையில் நாட்டில் மேலும் பல பகுதிகள் முடக்கம் - ஒரு பகுதி விடுவிப்பு.

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, மாத்தறை மாவட்டத்திற்கு உட்பட்ட உயன்வத்த மற்றும் உயன்வத்த வடக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், மாத்தளை மாவட்டத்திற்கு உட்பட்ட ஹப்புவிட கிராம சேவகர் பிரிவும் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கண்டி மாவட்டத்திற்கு உட்பட்ட வலகம்பாய கிராம சேவகர் பிரிவு, திம்புட்ட கிராமம் மற்றும் கொஸ்காதென்ன ஆகிய பகுதிகளும், புத்தளம் மாவட்டத்திற்கு உட்பட்ட மெதகிரிமட்டியான ஆகிய பகுதிகளும் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, குருநாகல் மாவட்டத்திற்கு உட்பட்ட நிகதலுபொத கிராம சேவகர் பிரிவு, உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.