இந்தோனேஷியா நிலநடுக்கம் − இலங்கைக்கு பாதிப்பா?

இந்தோனேஷியாவில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது என இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

இந்தோனேஷியாவின் வடக்குசுசுமத்ரா பகுதியில் 6.7 ரிக்டர் அளவில் இன்று நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

எவ்வாறாயினும், இந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு பாதிப்பு கிடையாது என இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவிக்கின்றார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.