வீடுகளில் இருந்து வெளியேறுபவர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

நேற்று (21) இரவு 11 மணி தொடக்கம் எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் காலப் பகுதியில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் கண்காணிப்பதற்கு சுமார் 22,000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த காலப்பகுதியில் முன்பு குறிப்பிட்டது போன்று தேசிய அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறையை பயன்படுத்தி அல்லது ஏனைய தேவைகளுக்காக வீடுகளில் இருந்து வெளியேறுவதற்கு எந்தவித அனுமதியுமில்லை என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இருப்பினும் அத்தியாசிய தேவைகளை முன்னெடுப்பதற்கு இந்த பயணக்கட்டுப்பாடு தடையாக அமையாது எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.