நடைமுறைக்கு வந்தது தேசிய அடையாள அட்டை நடைமுறை!

நாடளாவிய ரீதியில் கடந்த 3 தினங்களாக அமுலில் இருந்த பயணக் கட்டுப்பாடு இன்று (17) அதிகாலை 4 மணியுடன் நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

ஆனால் இன்று (17) முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இரவு 11 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரை பயணக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் எனவும் அந்தக் காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை இன்று முதல் தேசிய அடையாள அட்டை நடைமுறையை பயன்படுத்தி வீட்டில் இருந்து அத்தியாவசிய தேவைக்காக வெளியில் செல்ல முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி இன்று (17) காலை முதல் பெரும்பாலான நகரங்களில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அடையாள அட்டையில் இறுதி இலக்கத்தின்படி வெளியில் வர தவறுவோர் கடுமையான பரிசோதிக்கப்பட்டு வீடுகளுக்கு திருப்பியனுப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

எனவே, நகரங்களுக்கு வருகைத்தரும் மக்கள் கட்டாயம் அடையாள அட்டையை அவதானித்து அதன்படி வருகைத்தருவதன் மூலம் அசௌகரியங்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.