கொரோனா தொற்றின் அபாயப்பகுதியாக மாறும் கண்டி மாவட்டம்...!

நாட்டில் நாளுக்கு நாள், கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து செல்லும் நிலையில், நேற்றைய தினத்தில் கொரோனா தொற்றுறுதியான 2,386 பேரில், அதிகமானோர் கண்டி மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளமை குறிப்பிடதக்கது.

கண்டி மாவட்டத்தில் 338 பேருக்கு தொற்றுறுதியானதாக, கொரோனா பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையத்தின், நாளாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், நுவரெலியா மாவட்டத்தில் நேற்றைய தினத்தில் 288 பேருக்கு கண்டி தொற்றுறுதியாகியுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 277 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 184 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 321 பேருக்கும், குருநாகல் மாவட்டத்தில் 181 பேருக்கும், காலி மாவட்டத்தில் 82 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.

அத்தோடு, மாத்தறை மாவட்டத்தில் 104 பேரும், கேகாலை மாவட்டத்தில் 23 பேரும், பதுளை மாவட்டத்தில் 26 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 41 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 5 பேரும், அநுராதபுரம் மாவட்டத்தில் 98 பேரும், வவுனியா மாவட்டத்தில் 10 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 12 பேருக்கும், நுவரெலியா மாவட்டத்தில் 288 பேருக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் 94 பேருக்கும், புத்தளம் மாவட்டத்தில் 81 பேருக்கும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 33 பேருக்கும் தொற்றுறுதியதாகியுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் 4 பேரும், பொலன்னறுவை மாவட்டத்தில் 11 பேரும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 72 பேரும், மொனராகலை மாவட்டத்தில் 64 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 19 பேரும் பதிவாகியுள்ளதாக, கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.