கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 939 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
புதுவருட கொத்தணியுடன் தொடர்புடைய ஆயிரத்து 897 பேரும் வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பிய 42 பேரும் இவ்வாறு கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 17 ஆயிரத்து 529 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைக் கடந்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த 922 குணமடைந்து நேற்று வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 75 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான 16 ஆயிரத்து 734 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் 14 உயிரிழப்புகள் நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 734 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment