பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் தற்போது வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிமுறைகளை பொதுப்போக்குவரத்தின் போது மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதன்படி, பஸ் மற்றும் முச்சக்கரவண்டி ஆகியன பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் போது கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார விதிகள் தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விதிகளை மீறுபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்காக இன்று(10) விசேட காவல்துறை சோதனை நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எனவே, பொதுப்போக்குவரத்து தொடர்பான பரிந்துரைகள் தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்துமாறு பிரதி பொலிஸ்மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.